NATIONAL

ஆற்றில்  கலந்த லேசர் பொருள் சம்பவம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 22 :

கி.மீட்டர் 271.2இல் அன்மையில் நிகழ்ந்த விபத்தொன்றினால் சுங்கை பெர்ணம் ஆற்றில் கலந்த லேசர் பொருள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதான் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் சிலாங்கூர் நீர் வாரியமான ஷபாஸ் நிறுவனம் கூறியது.

சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினம் முதல் அந்த ஆற்றுநீரை முறையாக கண்காணித்து வருவதாகவும் அதன் நீரின் தரத்தை நுண்ணியமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகவும் அதனால் சம்மதப்பட்ட ஆற்றுநீர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதன் அதிகாரி அப்துல் ராவுப் அமாட் தெரிவித்தார்.

மேலும்,எந்தவொரு சிக்கலும் இடையூறும் இன்றி நீர் விநியோகம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் நீர் சுத்திகரிப்பு மையம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.நீர் தடை எதுவும் நிகழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக பெர்னாமா சபாக் பெர்ணம்  முழுவதும் நீர் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இருப்பினும்,நீர் தடை எதுவுமில்லை என்றும் நீர் விநியோகம் சீராக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :