SELANGOR

சிலாங்கூரின் மாநிலத்தின் உட்கட்டமைப்பு தான் மாநிலத்தின் வலுவான பொருளாதாரத்திற்கு சான்று

நாட்டின் மொத்த உற்பத்திக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிடும் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அதன் வலுவான நிலைக்கும் இம்மாநில்ம் கொண்டிருக்கும் அதன் சிறந்த உட்கட்டமைப்புதான் காரணியம் என மந்திரி பெசார் அமிரூடின் சஹார் கூறினார்.
அந்நிலையை கருத்தில் கொள்ளும் போது நம் மாநிலம் கொண்டிருக்கும் சீரான மற்றும் சிறந்த சாலைகளும் இங்குள்ள மக்களின் மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் சாத்தியமான சூழலை உருவாக்கியுள்ளது என்றார்.
சிறந்த மற்றும் தரமான சாலை வசதிகளையும் சிலாங்கூர் மாநிலம் கொண்டிருப்பதால் அஃது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பெரும் பெரிதும் உதவுகிறது.குறிப்பாக வர்த்தக ரீதியிலும் வாணிப நிலையிலும் நன் வாய்ப்பினை ஏற்படுத்திடும் அதேவேளையில் கல்வியல்,பாதுகாப்பு மற்றும் சமூகபொருளாதாரத்திற்கும் அஃது துணைபுரிகிறது என்பதையும் சுட்டிக்காண்பித்தார்.
மாநிலத்தின் உட்கட்டமை அந்தந்த மாநிலத்தை மட்டுமின்றி அது சார்ந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்பதற்கு சிலாங்கூர் மாநிலம் முன்மாதிரியாக விளங்குவதாகவும் கூறிய அவர் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார பலமே அதன் உட்கட்டமைப்புதான் என்றும் பெருமிதமாக கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் மலேசியாவின் மையப்பகுதியாகவும் அதேவேளையில் அனைத்துலக ரீதியிலும் தொடர்புப்ப்பாலமாகவும் விளங்குவதால் அஃது பெரும் சாத்தியமாகிறது.அதுமட்டுமின்றி,மாநில அரசாங்கத்தின் தனித்துவமான உட்கட்டமைப்பு செயல்பாடுகளும் அதற்கு வழிசெய்கின்றன என்றார்.
இந்நிலை தொடர்ந்து வலுவாக நகர்வதால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் சிலாங்கூர் மாநிலம் தனித்துவமாகவும் முதன்மை நிலையையும் எட்டியுள்ளது.அதேவேளையில்,நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குகிறது என்றும் மந்திரி பெசார் கூறினார்.
மிகவும் வளர்ச்சியும் மேம்பாடும் கொண்ட மாநிலமாக விளங்கிடும் சிலாங்கூர் மாநிலம் மக்களின் நலனை சார்ந்த மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியும் உள்ளது என்பதை குறிப்பிட்ட மந்திரி பெசார் சிறந்த மற்றும் தரமான சாலைகள் மூலம் மாநிலங்களின் மத்தியில் தொடர்பினை ஏற்படுத்திடும் அதேவேளையில் உள்ளூர் மக்களிடையே வலுவான தொடர்பினை ஏற்படுத்தவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம் நிலை உயர இதற்கு முன்னர் தொழிற்துறையை அதிகம் சார்ந்திருந்த நிலையில் தற்போது அது சேவைதுறையையும் நம்பி நகர்ந்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர் இத்துறை இன்னும் நீண்ட விரிவாக்கத்தை எட்ட வேண்டும் என்றும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
சிலாங்கூர் மாநிலம் தொழில்துறை புரட்சியை மேற்கொண்டு அதன் மூலம் இன்று சிறந்த பொருளாதார மாநிலமாக பதிவு செய்துள்ளது.எனவே,தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதேவேளையில் சிலாங்கூர் மாநில வாழ் மக்களின் சமூக பொருளாதார உயர்விற்கும் தொடர்ந்து மாநில அரசாங்கம் அதன் தனித்துவ செயல்பாட்டில் வெற்றிகரமான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அமிரூடின் சஹாரி தெரிவித்தார்.


Pengarang :