NATIONAL

போக்குவரத்து அமைச்சு: “விரைவு வாகன உரிமங்களை” ஒப்படைக்க வேண்டும்

புத்ரா ஜெயா, செப்டம்பர் 13:

மலேசியாவில் சட்ட விரோதமாக வாகன உரிமங்களை பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து அமைச்சின் ஒருமைப்பாடு பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூஃக் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 14,000 “விரைவு வாகன உரிமங்களை” சட்ட விரோதமாக ஒரு கும்பல்  வெளியிட்டுள்ளனர் என்று விவரித்தார்.

” தானாகவே முன்வந்து தங்களின் சட்ட விரோத வாகன உரிமங்களை ஒப்படைத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப் படாது. ஆனாலும், கொடுக்கப்பட்ட காலத்தில் இதை செய்யாவிட்டால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சாலை போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 114 பாயும். இதன் மூலம் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டவர்களுக்கு அபராதம் ரிம 5,000 அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே ஒரு சேர கிடைக்கும்,” என்று செய்தியாளர்களிடம் அந்தோணி லோக் கூறினார்.


Pengarang :