SELANGOR

வளமான பொருளாதாரம் – மேம்பாடு மிக்க மாநிலம்

சிப்பாங், செப்டம்பர் 23 :

ஒன்றுப்பட்டு முன்னேறுவோம் எனும் அடிப்படையில் நாம் அனைவரும் வளமான பொருளாதாரம் மற்றும் மேம்பாடு மிக்க மாநிலம் எனும் நிலைக்கு உயர வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி தெரிவித்தார்.

மாநிலத்தின் பொருளாதார மேம்பாடு உயர உயர மக்களின் வாழ்வாதாரமும் சிறந்த நிலைக்கு உயரும் என்றும் கூறிய மந்திரி பெசார் அந்நிலையில் நாம் உயருவதற்கு நம்மிடையே ஒற்றுமையும் ஒருமித்த சிந்தனையும் மேலோங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில்,மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் மக்களின் நலனோடு மாநிலத்தின் மேம்பாடும் பொருளாதார வளர்ச்சியும் அதில் உயிர்கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்நிலையில்,இன்றைய இளம் தலைமுறையின் பங்களிப்பும் போற்றுதகுரியதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இளம் தலைமுறையின் பங்களிப்பு பல்வேறு துறைகளில் பெரும் பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,மக்களின் நலனை காப்பது மட்டும் ஒரு அரசாங்கத்தின் பங்களிப்பாக இருந்து விடமுடியாது என்றும் நினைவுறுத்திய மந்திரி பெசார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியோடு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அஃது வழி செய்ய வேண்டும் என்றும் விவரித்தார் அவர்.

மேலும்,ஒவ்வொரு மேம்பாடு திட்டங்களும் மக்களுக்கானதாக இருத்தல் வேண்டும்.அதன் மூலம் மக்களும் தொடர்ந்து மேம்பாடு காண வேண்டும் என்பதே மாநில அரசாங்கத்தின் இலக்கு என்றும் கூறினார்.இதற்கிடையில்,சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம் மந்த நிலையை எட்டினால் நாட்டின் பொருளாதாரமும் பின்னடைவை எதிர்நோக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

எனவே,நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு கைகொடுத்தால் சிலாங்கூரின் வளர்ச்சி மேம்பாட்டுடன் மக்களின் மேம்பாடும் உயரிய நிலைக்கு எட்டும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்


Pengarang :