NATIONAL

அமாட் ஜாயிட் குற்றச்சாட்டுகளை மறுத்தார்?

கோலா லம்பூர், அக்டோபர் 19:

அம்னோவின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாயிட் ஹாமிடி தனது மீது செஸன் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 45 குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதில் நம்பிக்கை மோசடி, லஞ்சம் வாங்கியது மற்றும் சட்ட விரோத பண மோசடி போன்றவை அடங்கும். ரிம 114,148,983.86 மதிப்பிலான பண மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை  நீதிபதி அஸூரா அல்வி முன்பு மறுத்து விசாரணை கோரினார்.

நீதிமன்றம், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜாயிட் ஹாமிடியை ரிம 2 மில்லியன் ஜாமின் தொகையில் விடுவித்தது. அது மட்டுமல்லாமல், இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் தனது அனைத்துலக கடப்பிதழை ஒப்படைக்க ஆணையிட்டது.

நீதிமன்றம் ஜாயிட் ஹாமிடியை நேற்று ரிம 1 மில்லியன் ஜாமின் தொகை கட்ட வேண்டும் என்றும் மீதித் தொகையை எதிர் வரும் அக்டோபர் 26-க்குள் நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், டிசம்பர் 14-இல் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப் படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :