ANTARABANGSA

அரசாங்கத்தின் நன்முயற்சிகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்துள்ளது !!!

லண்டன், அக்டோபர் 2:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள பொருளாதார சீரமைப்பு  நன்முயற்சிகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இதற்கு முன்பு இருந்த தேசிய முன்னணி அரசாங்கத்தினர் செய்த தவறுகளை காரணம் காட்டி  மலேசியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர், இருந்தாலும் தற்போதைய அரசாங்கம் கையெடுத்துள்ள மறுசீரமைப்பு முயற்சிகளை கண்டு மீண்டும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

”  நாடு மறுசீரமைப்பு நடவடிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மலேசிய நாடு சிறந்த சூழ்நிலையில் உள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கை முடியும் தருவாயில் நாடு முதலீட்டிற்கு தயாராக இருக்கும்,” என்று பிரிட்டன் நாட்டிற்கான பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் மகாதீர் இவ்வாறு பேசினார்.

லண்டனில் தனது அதிகாரப்பூர்வ வருகையின் போது பல தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். மலேசிய நாட்டின் ரிம 1 திரிலியன் கடன் தொகையை கேள்விமுற்று முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று மகாதீர் கூறினார் .

தகவல்: பெர்னாமா


Pengarang :