NATIONAL

எம்டியூசி & அரசு சாரா இயக்கங்கள் குறைந்த வருமானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேரணி !!!

கோலா லம்பூர், அக்டோபர் 17:

ஏறக்குறைய 100 தொழிலாளர்கள் மெர்போக் மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை நடந்து சென்று அரசாங்கம் நிர்ணயித்த ரிம 1050 குறைந்த வருமானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மலேசிய தொழிற்சங்கம் (எம்டியூசி), மலேசிய சோஷியலிஸ் கட்சி (பிஎஸ்எம்) மற்றும் சில அரசு சாரா இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேற்கண்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர், மனிதவள அமைச்சர் குலசேகரனின் அனுமதியோடு நாடாளுமன்றத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘1050 எதிர்க்கிறோம் ‘ என்ற பதாகைகளை ஏந்தி வந்தது அண்மையில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் குறைந்த வருமானம் ரிம 1050 என நிர்ணயம் செய்த நடவடிக்கையை கண்டிப்பதாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :