ANTARABANGSA

காவல்துறை & எஸ்பிஆர்எம் முக்கிய வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்

லண்டன், அக்டோபர் 2:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) மற்றும் மலேசிய அரச காவல்துறை (காவல்துறை) ஆகிய இரண்டு அமலாக்க பிரிவினரும் அதிகமான வழக்குகளை எதிர் நோக்கி வருகின்றனர், இருந்தாலும் முக்கியமான வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அவர்களின் மோசடிகள் போன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

” அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எல்லா ஆவணங்களையும் ஏஜியிடம் கொடுக்கப்பட்டது. தற்போது ஏஜி தனது பணியை தொடங்கப்படும்,” என்று பிரிட்டன் நாட்டிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு பேசினார்.

சட்ட முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஆனாலும் இது கொஞ்சம் காலம் தேவைப்படும் என்று மகாதீர் கூறினார்.


Pengarang :