NATIONAL

தோல்: மக்களின் சுமையை குறைக்க மாற்று வழியை அரசாங்கம் ஆராயும் !!!

கோலா லம்பூர், அக்டோபர் 18:

தோல் கட்டணம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மாற்று வழியை அரசாங்கம்  ஆராய்ந்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பாரு பியான் கூறினார். ஏற்கனவே தோல் கட்டணத்தை அகற்றப்படும் நடவடிக்கையை அரசாங்கம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், தோல் கட்டணம் குறைப்பது, கட்டணங்களை ஒருமுக படுத்துவது மற்றும் கட்டண கழிவு போன்றவை அடங்கும் என்று பாரு பியான் தெரிவித்தார். மேலும் கூறுகையில், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் தோல் கட்டணம் நீக்கும் நடவடிக்கை யை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.

”  அதே நேரத்தில், தோல் கட்டணம் அதிகரிப்பு இருக்காது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகிறது,” என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரின் கேள்வி பதில் நேரத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் : பெர்னாமா


Pengarang :