NATIONAL

பெர்சே: மின்னியல் வாக்களிப்பில் பாதுகாப்பு பலவீனத்தால் பாதிப்பு?

ஷா ஆலம், அக்டோபர் 31:

பாதுகாப்பு அம்சத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘ஈ-வோட்டிங்’ எனப்படும் மின்னியல் வாக்களிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று நீதியான மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பின் (பெர்சே 2.0) தலைமை இயக்குநர் யாப் சுவீ செங் கூறினார்.

இந்த நடைமுறையை தொடர்வதற்கு முன்பாக பாதுகாப்பு பலவீனத்தை சரிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இணையம் மூலம் வாக்களிக்கும் இந்த வழிமுறையை தாக்குதல் நடத்த முடியும் என்று யாப் சுவீ செங்  விவரித்தார். மேற்கண்ட காரணத்தால் பல நாடுகளில் நடத்தப்படும் தேர்தல்களில் மின்னியல் வாக்களிப்பு அமல்படுத்தப்படவில்லை என்றார்.

”  இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் மின்னியல் வாக்களிப்பு அமல்படுத்தப்பட்டு வந்தாலும் அது முழுமையான முறையில் செயல்படுத்தப் படவில்லை. பாதுகாப்பு அம்சத்தினால் பல நாடுகளில் இன்னும் வாக்களிப்பு சீட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மின்னியல் வாக்களிப்பு நம் நாட்டில் பயன்படுத்துவதை மறுக்க முடியாது, ஆனால் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே செயல்படுத்த வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.


Pengarang :