SELANGOR

மந்திரி பெசார்: வெள்ளப் பிரச்சினையை எதிர்க் கொள்ள நீண்டகால அடிப்படையில் திட்டம் வரையப்படும்

ஜெராம், அக்டோபர் 19:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், புக்கிட் ஹீஜாவ் கிராம வெள்ளப் பிரச்சினையை எதிர்க் கொள்ள நீண்டகால அடிப்படையில் திட்டத்தை  வரையும் என்று மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கவும் மற்றும் எதிர்காலத்தில் வெள்ளத் தடுப்பை ஏற்படுத்த மாநில அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்று அமீரூடின் கூறினார்.

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம், கால்வாய் அடைப்பு அல்லது மற்ற காரணங்கள் அல்ல மாறாக ஆற்றின் நீர் அளவு உயர்ந்ததே ஆகும் என்று விவரித்தார்.

”  இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு , 2015-இல் புக்கிட் ஹீஜாவ் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் பள்ளத்தாக்கு பகுதியில் இருப்பதால், நீரின் அளவு உயர்ந்த நிலையில் இருக்கும் போது வெள்ளம் ஏற்படுகிறது,” என்று அமிரூடின்  விவரித்தார்.


Pengarang :