SELANGOR

ரூமா சிலாங்கூர்கூ விலை வெ.20,000 குறைந்தது

ஷா ஆலம், ஆக்டொபர் 23:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரூமா சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டம் 2இன் வீட்டின் விலையில் வெ.20,000ஐ குறைக்க இணக்கம் தெரிவித்ததால் சிலாங்கூர் வாழ் மக்கள் குறைந்த விலையில் வீட்டை வாங்கிடும் வாய்ப்பினை பெறுகிறார்கள்.

இந்த இணக்கத்தின் மூலம் சிலாங்கூரில் அதிகமானோர் சொந்த வீடுகளை கொண்டிருக்கும் சாத்தியத்தை பெறுவர் என்றும் மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.

ரூமா சிலாங்கூர்கூவின் கொள்கையில் மாற்றம் செய்திருப்பது காலத்திற்கு ஏற்றது என்றும் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.அதேவேளையில் சிலாங்கூரில் வீடமைப்புதுறையின் வளர்ச்சிக்கும் உகர்ந்தது என்றார்.

இதன் மூலம் இனம்,தகுதி,வருமானம் உட்பட பல்வேறு வரையறைகளை ஓரங்கட்டி விட்டு சிலாங்கூரில் வாழும் ஒவ்வொருவரும் மாநிலத்தின் வீடமைப்பு துறையின் வளர்ச்சியில் நன்மையை அடைவது உறுதி செய்யப்படுவதோடு வெறும் வெ.42,000இல் வீடுகளை வாங்குவதையும் சாத்தியமாக்கியிருப்பர் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் இதன் மூலம் குத்தகை நிறுவனம் உட்பட பொது மக்களும் நன்மை அடையும் வகையில் துள்ளியமாய் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,அரசாங்கத்தின் இத்திட்டத்தின் புறநகர் பகுதி மக்களும் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் அஃது விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில் உகர்ந்த இடங்களையும் கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வருட செப்டம்பர் மாதம் வரையிலான பதிவின்படி இதுவரை 204 வீடமைப்பு திட்டங்கள் மூலம் இதுவரை 104,460 வீடுகளுக்கு மாநில அரசாங்க மன்றம் அனுமதி ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவற்றில்,6,303 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் 22,336 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் 2018 முதல் 2022 வரையில் கட்ட கட்டமாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடியேறுவர் என்றார்.


Pengarang :