சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் 2019: ஆலயங்களுக்கு வெ.17 லட்சம் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் 2019: ஆலயங்களுக்கு வெ.17 லட்சம்

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கி வரும் ஆலயங்களுக்கும் அதன் வளர்ச்சிக்கும் மாநில அரசாங்கம் வெ.17 லட்சத்தை ஒதுக்குவதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பித்த போது அவர் இத்தகவலை தெரிவித்தார்.


இதன் மூலம் தொடர்ந்து இம்மாநிலத்திலுள்ள இந்து கோவில்கள் சிறப்பாக சமய பணியினை மேற்கொள்ள இம்மானியம் துணை நிற்கும் என்றார்.

மேலும்,இம்மாநிலத்திலுள்ள இந்து ஆலய விவகாரங்களில் மாநில அரசாங்கம் மிகவும் தனித்துவமான கவனத்தை விவேகமாய் மேற்கொண்டு வருவதாகவும் ஆலய வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அக்கறைக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஆலய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வெ.17 லட்சம் ஒதுக்கப்பட்டது இந்துக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

RELATED NEWS

Prev
Next