SELANGOR

அரசாங்கத்தின் பரிவுமிக்க திட்டம் மக்களின் ஆளுமை மற்றும் ஆற்றலில் தனித்துவம் செலுத்துகிறது

சபாக் பெர்ணம், நவ09:

சிலாங்கூர் மாநில மக்களின் நலனை பாதுகாப்பதற்காக பல்வேறு பரிவு மிக்க திட்டங்களை கொண்டிருக்கும் ஐ.பி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டில் அத்திட்டம் சரியான இலக்கில் தொடர்ந்து பயணித்து வருகிறது.இதன் மூலம் தொடர்ந்து மக்களின் ஆளுமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் மாநில அரசாங்கம் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாக மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இத்திட்டம் பெரும் பங்காற்றி வரும் நிலையில் தொடர்ந்து இம்மாதிரியான சலுகைகள் தொடர்ந்து அமலில் இருப்பதை காட்டிலும் அதனை சீரமைத்தும் இவைகள் இல்லாமல் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான வழியினை அடையாளம் காண வேண்டியிருப்பதாகவும் அதில் அரசாங்கம் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டங்கள் அடுத்தக்கட்ட ஆக்கபூர்வமான நகர்வினை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த மந்திரி பெசார் மக்களின் வாழ்வாதார சிறப்பிற்கு ஒப்ப இத்திட்டங்களை நன்கு ஆராய்ந்தும் வருவதாக கூறினார்.மேலும்,இத்திட்டத்தின் மூலம் ஏழ்மை மற்றும் வறுமையை குறைக்கும் செயல்முறையும் ஒழுங்குப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,மக்கள் எப்போதும் அரசாங்கத்தின் சலுகைகளையும் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்காமல் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக விவேகமாக செயல்படுவதோடு அரசாங்கத்தோடும் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு பல திட்டங்களை அமல்படுத்தினாலும் சலுகைகளை வழங்குவதை காட்டிலும் விவேகமான வாழ்வியல் சூழலை ஏற்படுத்துவது எப்படி என்பதை கற்பிப்பதே மாநில அரசாங்கத்தின் இலக்கு என்றும் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடும் மக்களுக்கானது.இதில் யாரும் விடுப்பட மாட்டார்கள்.ஆனால்,மக்கள் விவேகமான முறையில் அத்திட்டங்களில் பங்கெடுக்க தவறிடவும் கூடாது என்றும் நினைவுறுத்தினார்.
நாம் அனைவரும் ஒரே இலக்கோடும் சிந்தனையோடும் கைகோர்த்து பயணித்தால் சிலாங்கூர் மாநிலம் சிறந்த வாழ்வாதாரம் மேம்பாடு கொண்ட மாநிலமாக உருமாற்றம் காணும் எனவும் அவர் நம்ப்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :