SELANGOR

இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்

சிலாங்கூர் மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை மாநில மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தாக்கல் செய்திருப்பது இந்திய சமூகத்திற்கு பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்திடும் நிலையில் உள்ளது.அவரது பட்ஜெட் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உகர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கினால் அஃது மிகவும் விவேகமாகவும் அதேவேளையில் இம்மாநில வளர்ச்சியில் இந்திய சமூகம் விடுபடாது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.இந்திய சமூகத்திற்காக நேரடியாகவும் அதேவேளையில் பிற ஒதுக்கீடுகள் மூலமும் இந்திய சமூகம் நன்மை அடையக்கூடிய நிலையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 லட்சமும்,ஆலயங்களுக்கு வெ.17 லட்சமும் அதேவேளையில் தோட்டப்புற மாணவர்களுக்கு வெ.20 லட்சமும் ஒதுக்கியுள்ள நிலையில் இவை நேரடியாக இந்திய சமூகத்திற்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய நிலையில் அமைந்துள்ளது.அதேவேளையில்,இலவச நீர் விநியோகம்,அரசு ஊழியர்களுக்கான ஒரு மாத போனஸ்,ஸ்மார்ட் வாடகை திட்டம்,ரூமா சிலாங்கூர்கூ,பெடுலி சிஹாட்,ஸ்மார்ட் அன்புத்தாய் திட்டம்(கீஸ்) உட்பட பல்வேறு திட்டங்கள் இந்திய சமூகம் நன்மை அடைய கூடிய நிலையில் உள்ளது.
மாநில அரசாங்கம் மெய்பித்திருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும் நன்மைகள் அடங்கிய விவேகமான பட்ஜெட்டாக இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் மூலம் இருக்கும் வாய்ப்புகளை தேடி சென்று அதனை உரிதாக்கிக் கொள்ள இந்திய சமூகம் முன் வர வேண்டும்.வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாறுவதை காட்டிலும் வாய்ப்புகளை தேடி சென்று உரிதாக்குவதே விவேகம்.
சுகாதாரம்,பொருளாதாரம்,விளையாட்டு,சமூகவியல்,கல்வி உட்பட வாழ்வியல் சார்ந்த அனைத்து நிலையிலான வாய்ப்புகள் இந்திய சமுகத்திற்கு இந்த 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்ளது.அதனை நன் முறையில் ஆராய்ந்து அதன் மூலம் நன்மை அடைய நாம் முன் வரவேண்டும்.
இதற்கிடையில் அன்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் 48 இந்திய கிராமத்து தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக அமைந்துள்ளது.பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக சிலாங்கூர் மாநிலம் விளங்குவதோடு மட்டுமின்றி இந்திய சமூகத்திற்காக பெரும் அங்கீகாரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசாங்கத்தின் திட்டங்களையும் வாய்ப்புகளையும் இவர்கள் நம் சமூகத்திற்கு கொண்டு செல்லும் உறவுப்பாலமாக விளங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து மாநில வளர்ச்சியோடும் மேம்பாட்டோடும் இந்திய சமூகத்தை கரம்பற்றி அழைத்து செல்வதில் ஒருபோதும் அலட்சியம் செய்ததில்லை என்பதற்கு மாநில வரவு செலவு திட்டம் பெரும் சான்றாக விளங்குகிறது.
அதேவேளையில்,அன்மையில் மிட்லண் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் பெரும் வரலாற்றினை பதிவு செய்திருப்பதை நினைவுக்கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.இதற்கு முன்னர் நாட்டின் ஸ்மார்ட் தமிழ்ப்பள்ளியாக விளங்கிய இப்பள்ளிக்கூடம் அன்மையில் மாணவர் தங்கும் விடுதிக்கான அடிகல் நாட்டு விழாவையும் நடத்து முடித்தது.இதுவொரு பெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய சமூகத்தின் நலனையும் உரிமையையும் தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிலைநிறுத்தி வருகிறது.நாம் தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமும் பிரதிபலனும் தான் இது.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் நாம் தொடர்ந்து சிறந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மறுத்திட முடியாத உண்மை.
அரசாங்கத்தை நாம் நம்பினோம் ஆதரவும் கொடுத்தோம்,அரசாங்கமும் நமது எதிர்பார்ப்பினை நிறைவு செய்தும் உள்ளது.நமக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டு விட்டது.அதனை விவேகமாகவும் அறிவார்ந்த நிலையிலும் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.வாருங்கள் விவேகமாய் சிந்திப்போம் – வாய்ப்புகளை பயன்ப்படுத்தி முன்னேறுவோம்.
சிலாங்கூர் மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்கள் நலன் சார்ந்த விவேகமான பட்ஜெட்.அதனை நாம் விவேகமாய் ஆராய்ந்து அதன் மூலம் நன்மை அடைந்து சரியான இலக்கில் வெறிகரமாக முன்னேற வேண்டும் எனவும் சிலாங்கூர் இன்று கேட்டுக் கொள்கிறது.
நன்றி
குணசேகரன் குப்பன்


Pengarang :