SELANGOR

உயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்

ஷா ஆலம்,நவம்பர் 23:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் திட கழிவுகளை அகற்றுவதில் தொழில்நுட்ப செயல்பாட்டினை முன்னெடுத்திருப்பதோடு உயர்தர தொழில்நுட்ப நடவடிக்கைக்கும் தயாராகி வருவதாக மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

நடப்பில் மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான worldwide holding berhad (WHB) தொழிநுட்ப திறனோடு திடகழிவுகளை அகற்றி வருவதாகவும் கூறிய மந்திரி பெசார் திடகழிவுகளை விவேகமாகவும் உயர்தர தொழில்நுட்பத்தோடு அகற்றும் திட்டத்திற்காக பட்ஜெட்டில் மாநில அரசாங்கம் வெ.540 மில்லியனை ஒதுக்கியதாகவும் கூறினார்.

இத்திட்ட மேம்பாட்டிற்காக சம்மதப்பட்ட நிறுவனம் வெ.500 மில்லியனை ஒதுக்கியுள்ள நிலையில் மாநில அரசாங்கம் வெ.40 மில்லியனை ஒதுக்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.

குப்பைகள் மற்றும் திட கழிவுகளை தொழிநுட்ப துணையோடு விவேகமாய் அகற்றும் காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலம் விளங்குவதாகவும் அதனை திறன்பட மேற்கொள்ள மாநில அரசு ஆயத்தமாகி விட்டதாகவும் தெதிவித்தார்.

நடப்பில் மக்கள் தொகையும் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய தலைமுறையினர் அதிகமான நெகிழி,உலோகம்,உணவு கழிவு,உட்பட பல்வேற்றை பயன்படுத்தும் நிலையில் அதனை அவர்கள் குப்பைகளாய் வீசும் போது பழைய முறை விவேகமற்றதாய் போகிறது.இவற்றை அகற்றவும் அழிக்கவும் தொழில்நுட்ப முறையே சரியான தேர்வு எனவும் மந்திரி பெசார் சுட்டிக்காண்பித்தார்.

இந்த புதிய தொழில்நுட்ப முறையால் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் மேற்கொண்டு வரும் உயர்தர தொழில்நுட்ப முறை நாட்டின் பிற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் விளங்குவதாகவும் வரவு செலவு திட்டத்தை சமர்பித்த அமிரூடின் தெரிவித்தார்.


Pengarang :