NATIONAL

கட்சியின் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால், தூக்கி எறியப்படுவார்கள்?

ஷா ஆலம், நவம்பர் 19:

கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அப்படி மீறினால் கட்சியில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற கெஅடிலான் கட்சித் தேர்தலை அடிப்படையாக கொண்டு தாம் கடுமையாகவும் நீதியான முறையிலும் செயல்படப் போவதாக கூறினார்.

துணைத் தலைவர் போட்டியில் பல்வேறு அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகள், எதிர்மறையான வதந்திகள் மற்றும் கடும் சொற்களை பயன்படுத்தியது போன்றவை கண்டு தாம் மிகவும் கவலை கொண்டதாக தெரிவித்தார்.

” கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை முதலில் தீர்த்து வைக்க வேண்டும். நான் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால், கட்சியில் இருந்து தூக்கி எறியப் படுவார்கள். என் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. அஸ்மின் அலி மற்றும் ரபிஸி ரம்லி ஆகிய இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்களின் ஆதரவாளர்கள் கடும் சொற்களை பயன்படுத்தியது மற்றும் வீண் வதந்திகளை பரப்பியது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி பட்டவர்கள் கட்சியின் தலைவர்களாக இருக்கும் தகுதியில்லை. மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தேன். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. ஆனாலும், அஸ்மின் அலி மற்றும் ரபிஸி ரம்லி ஆகிய இருவரின் அர்ப்பணிப்பை நாம் மறுக்க முடியுமா?,” என்று கெஅடிலான் கட்சியின் 13-வது தேசிய மாநாட்டில் தமது உரையில் அன்வார் இவ்வாறு கூறினார்.


Pengarang :