NATIONAL

சைடானை கைது செய்ய பிடி ஆணை?

ஷா ஆலம்,நவ09:

பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சைடான் காசீம்யை கைது செய்ய கங்கார் செக்‌ஷன் நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்தது.

குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அவருக்கு எதிரான பிடி ஆணையை இன்று செக்‌ஷன் நீதிமன்றம் பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கெதிரான வழக்கில் முன்னிலைப்படுத்த தவறிய காரணியத்தால் அரசு தரப்பின் துணை வழக்கறிஞர் முகமட் நோர்டின் இஸ்மையில் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நீதிபதி ஜோஹாரி அபு அசான் பிடி ஆணையை வெளியிட்டார்.

சைடானை பிரதிநிதித்த வழக்கறிஞர் தற்போது சைடான் வெளியூரில் இருப்பதாகவும் இதுபோன்ற வழக்கில் முன்னதாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும்,சைடான் பெர்லிஸ் மாநிலத்தில் வசிக்கிறார்.அவர் இங்கிருந்து தப்பிக்க முனைந்தால் மட்டுமே பிடி ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து தன் வாதத்தை முன் வைத்த சைடானின் வழக்கறிஞர் அவருக்கெதிரான பிடி ஆணையை ரத்து செய்யும் விண்ணப்பத்தையும் மேற்கொள்ள விருப்பதாக கூறினார்.

பெண் ஒருவர் புக்கிட் அமானில் செய்த புகார் அடிப்படையில் சைடானிடம் இதற்கு முன்னர் போலிஸ் வாக்குமூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது வாக்குமூலத்தை வழங்கிய சைடான் தவறான புரிதலால் தம் மீது புகார் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

தனது உடல்நிலை காரை விட்டு வெளியேற தடையாக இருந்த காரணியத்தால்
காரில் தானும் அந்த பள்ளி மாணவியும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அதனை தவறாக புரிந்துக் கொண்டு தம்மீது இவ்வாறு புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :