SELANGOR

சைபர்ஜெயாவில் 864 ரூமா சிலாங்கூர்கூ

சைபர்ஜெயா, நவம்பர் 20:

சைபர்ஜெயாவை உள்ளடக்கிய தசெக் சிலாங்கூர் சைபர்வெலி பகுதியில் சுமார் 864 ரூமா சிலாங்கூர்கூ உருவெடுக்கவுள்ளதாகவும் அஃது தற்போது அதன் கட்டுமானபணியில் இருந்து வருவதாகவும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் செயல்முறை அதிகாரி நோரித்தா முகமட் சிடேக் தெரிவித்தார்.

இதன் மூலம் அதிகமானோர் சொந்த வீடுகளை கொண்டிருக்கும் சாத்தியத்தை அஃது உருவாக்கியிருப்பதாகவும் கூறிய அவர் அன்மையில் நடைபெற்ற சொத்துடமை கண்காட்சியின் போது இதனை குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியின் போது ரூமா சிலாங்கூர்கூ திட்டத்தில் பதிந்துக் கொள்பவர்களுக்கு 20 விழுகாடு தள்ளுபடி வழங்கப்படுகிறது, இருக்கும் இவ்வாய்ப்பினை சிலாங்கூர் வாழ் மக்கள் நன் முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் த்செக் சிலாங்கூர் சைபர்வெலி பகுதி இன்னமும் பொது மக்களுக்கு அந்நியமான ஒரு இடமாகவே விளங்குவதாகவும் சுட்டிக்காண்பித்த அவர் அனைத்து வசதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் இப்பகுதியில் வீடுகள் வாங்குவது சிறந்தது என்றும் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் ரூமா சிலாங்கூர்கூ திட்டம் மக்களுக்கான நன் திட்டம்.இதனை பயன்படுத்தி சொந்த வீடு கனவை அனைவரும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் இருக்கும் வாய்ப்பினை விரைந்து தன் வசப்படுத்திக் கொள்ள மக்கள் முன் வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :