SELANGOR

தோட்டப்புற மாணவர்களுக்கு வெ.20 லட்சம்

ஷா ஆலம், நவம்பர் 23:

தோட்டப் பாட்டாளிகளின் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதன் 2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் வெ.20 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

தோட்டப் புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்த நிதியை ஒதுக்குவதாக மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறவும் இந்நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

மேலும்,மாணவர்களின் நலனை உயர்த்க்துவதோடு மட்டுமின்றி தோட்டப்புற பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கவும் இந்த ஒதுக்கீடு அதன் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீடு நாட்டிலேயே தனித்துவமானது.வேறு எந்த மாநிலத்திலும் பாட்டாளி மாணவர்களுக்காக இவ்வளவுப் பெரிய நிதியை ஒதுக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :