NATIONALUncategorized @ta

பி40 வர்க்கத்தினருக்கான சுகாதார அட்டை திட்டம் 2019-இல் தொடங்குகிறது

புத்ரா ஜெயா, நவம்பர் 12:

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் வர்க்கத்தினரை முன்னிலை படுத்தி வரையப்பட்ட பரிவுமிக்க சுகாதார திட்டம் 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-இன் வரவு செலவுத் திட்டத்தில் ரிம 100 மில்லியன் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு வழங்கி உள்ளதாக அவர் கூறினார்.

” தொற்று நோய் அல்லாத நோய்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்க இருக்கிறது. அதில் நீரிழிவு நோய் மற்றும் இரத்த கொதிப்பு கண்டிப்பாக அதில் இடம்பெறும்,” என்று சுகாதார அமைச்சின் பணியாளர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு ஸூல்கிப்லி பேசினார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :