SELANGOR

மெரிடைம் கெட்டவேய்” சிலாங்கூரின் புதிய பொருளாதார மூலம்

ஷா ஆலம், நவம்பர் 20 :

கிள்ளான் ஆற்றை மேம்படுத்துவதன் மூலம் “மெரிடைம் கெட்டவேய்”(maritime gateway) திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலம் புதிய பொருளாதார மூலத்தை உருவாக்க முடியும் என மாநில மந்திரி பெசார் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 35,612.37 எக்டர் பரப்பளவு நிலத்தை மாநில அரசாங்கம் நகர்புற மறுமலர்ச்சியின் அடிப்படையில் இத்திட்டத்தை மேம்படுத்திட முனைந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் வாணிபம்,ஹோட்டல் துறை,சுற்றுலாத்துறை,வீடமைப்பு மற்றும் சேவை துறை மேம்படுத்தப்படுவதோடு அவை மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என்றார்.
அதுமட்டுமின்றி,இத்திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் தூய்மையான நீர் வசதி உறுதிப்படுத்தப்படுவதோடு கிள்ளான் ஆற்றுநீரும் இரண்டாம் தரநிலைக்கும் உயரும்.இஃது நேரடியாக அந்நிலையை எட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில்,இதன் மூலம் கிள்ளான் ஆற்றை முக்கிய போக்குவரத்து தடமாகவும் உருமாற்ற முடியும்.கிள்ளான் ஆற்று முனையத்திலிருந்து சுபாங் ஜெயா மாநகரம் வரையில் இப்போக்குவரத்து சாத்தியமாகலாம். அதற்காக சிறு படகு உட்பட பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திட திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

முன்மொழியப்படிருக்கும் இத்திட்டத்தை மாநில அரசாங்கம் வரவேற்பதாகவும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாகவும் கூறிய அவர் வரும் 2035 கிள்ளான் மாநகர திட்டத்தின் கீழ் வரையறுக்கப்படும் என்றார்.அதுமட்டுமின்றி,இத்திட்டம் ஆற்றுநீர் மாசுப்படுத்தப்படுவதற்கான மூலத்தை ஆராய வாய்ப்பு இருப்பதோடு வருங்காலத்தில் கிள்ளான் ஆறு தூய்மையான ஆறாகவும் உருவெடுக்கும் என்பது தின்னம்.

உலக நகர பெருந்திட்டம் நிகழ்வினை சிலாங்கூர் மாநில அளவில் தொடக்கி வைத்து பேசுகையில் மந்திரி பெசார் இத்திட்டம் குறித்து விவரித்தார்.


Pengarang :