SELANGOR

வரவு செலவுத் திட்டம் ’19: எம்பிஐ மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்

ஷா ஆலம், நவம்பர் 23:

மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) 2019-இன் சிலாங்கூர் மாநில  வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் பணியை திறம்பட முடிக்கும் என்று எம்பிஐ-இன் தலைமை செயல் அதிகாரி ராஜா ஷாரின் ராஜா ஓத்மான் நம்பிக்கை  தெரிவித்தார். மேற்கண்ட வீடமைப்பு திட்டங்களை செவ்வனே செயல் படுத்த சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றங்கள் திட்டமிடல் ஒப்புதல் வழங்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  எல்லா நிலங்களும் எம்பிஐ-க்கு சொந்தமானது. ஆகவே, வீடமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் பணியில் எந்த பிரச்சினையும் எழாது. தகுதியான வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து மலிவு விலை வீடுகளை எம்பிஐ  நிர்மாணிக்கும்,” என்று சிலாங்கூர் மாநில 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி சட்ட மன்றத்தில் தாக்கல் செய்த பிறகு சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.


Pengarang :