SELANGOR

விவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்

ஷா ஆலம்,நவம்பர் 23:

ஸ்மார்ட் வாடகை திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்கும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் மாநில அரசாங்கம் சிலாங்கூர் மாநில சொத்துடமை வாரியத்தின் கீழ் சுமார் வெ.50 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டம் இன்றைய நிலையில் மிகவும் அவசியமானதாக விளங்குவதாகவும் மக்கள் மத்தியில் நன் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதாக கூறிய மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மக்களுக்கும் இளம் தலைமுறைக்கும் காலத்திற்கு உகர்ந்த திட்டம் இதுவென்றும் 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அவர் விவரித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 842 வீடுகள் வெ.122.8 மில்லியனுக்கான வீடுகள் எல்.பி.அச்.எஸ் வாரியத்திடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வீடுகளை மக்கள் இத்திட்டத்தின் கீழ் வாங்குவதற்கு எல்.பி.எச்.எஸ் தரகராக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,341 வீடுகள் வெ.450 முதல் வெ.650 வரையிலான வாடகை திட்டத்திற்கு தயாராகவே இருப்பதாகவும் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் முதல் வெ.5000க்கும் கீழ் பட்ட ஊதியம் பெறுபவர்கள் இதில் பயன் பெறுவர்.குறிப்பாக இளம் தலைமுறைக்கு இது பெரிதும் உதவும் என்றார்.

வாடகையாக பெறப்படும் நிதியிலிருந்து 30விழுகாடு சம்மதப்பட்டவர்கள் வீடு வாங்க முன் பணமாக திரும்ப ஒப்படைக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.


Pengarang :