SELANGOR

2019 சிலாங்கூர் மாநில பட்ஜெட் மக்கள் நலனை சார்ந்திருக்கும்

கோம்பாக், நவம்பர் 19:

சிலாங்கூர் மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநில மேம்பாட்டையும் அதேவேளையில் மக்கள் நலனை அதிகம் சார்ந்து இருக்கும் என மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.அவற்றில் மக்கள் நலனின் முன்னோடியாய் விளங்கிடும் மக்களுக்கான பரிவு மிக்க திட்டங்களை அஃது சார்ந்திருக்கும் என்றும் கோடிக்காட்டினார்.

சுமார் 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை நாம் ஆட்சி செய்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் மூலம் நாம் தொடர்ந்து மக்களுக்கான நன்மை மிக்க திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம்.இந்நிலையில்,நடப்பில் அத்திட்டங்களை நாம் மேலும் விரிவாக்கம் செய்திடல் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வளத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தல் எனும் அடிப்படையில் மாநில வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் மக்களும் தொடர்ந்து வாழ்வாதார மேம்பாட்டை நோக்கி உயர்ந்தும் வருகிறார்கள்.இம்முறை மாநில அரசின் பட்ஜெட் மாவட்ட நிலைகளிலும் மக்களின் பரிவு மிக்க நலத்திட்டங்களையும் முதன்மையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும் என்றார்.

இதுவரை நாம் மெற்கொண்ட திட்டங்கள் யாவும் மாநிலத்திற்கும் மக்களும் உகர்ந்த பயனை அளித்துள்ளது.இனி வருங்காலங்களிலும் இதைவிட சிறந்த ஒன்றை வழங்கிடவே மாநில அரசு ஆவணம் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இம்முறை புத்தரா ஜெயாவையும் நாம் கொண்டிருப்பதால் மாநில பட்ஜெட்டுடன் மத்திய அரசின் பட்ஜெட்டும் சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்ப்பாட்டிற்கும் பெரும் துணை நிற்கும் என்றார்.

நாம் தொடர்ந்து சரியான இலக்கில் பயணிக்க வேண்டுமானால், அரசாங்கம்,அரசு பொது ஊழியர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கரம்கோர்த்து செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் உகர்ந்ததாகவே அமைந்திருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை எனவும் மந்திரி பெசார் தெரிவித்தார்.


Pengarang :