ஐபிஆர் திட்டங்கள் தொடரப்படும் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஐபிஆர் திட்டங்கள் தொடரப்படும்

ஷா ஆலம், டிசம்பர்:

பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) சில உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்கள் தொடரப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். உருமாற்றம் செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிலாங்கூர் அன்புத்தாய் விவேக திட்டமும் அடங்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மாநில அரசாங்கத்தின் புதிய வியூகத்தில் ஐபிஆர் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தும் வகையிலும் திறன்மிக்க முறையில் இருக்கும் என்றார்.


”  மாநில மந்திரி பெசார் என்ற முறையில் மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து நிலையாக இருக்க தாம் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த வாரம் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் எல்லா தரப்பினரும் பயன் அடையும் வகையில் உள்ளது. பி40 வர்கத்தினர் தங்களின் வருமானம் அதிகரிக்க உந்துதல் ஏற்படுத்தும் வேளையில் எம்40 வர்கத்தினர் தங்களின் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளளது,” என்று சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தை நிரைவு செய்யும் உரையில் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

 

RELATED NEWS

Prev
Next