சுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

சுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு

முன்னாள் கோத்தா அங்கிரிக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் யக்கோப் சப்பாரி மற்றும் முன்னாள் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளரான சுரேஷ் சிங் த/பெ ரஸ்பால் சிங் ஆகிய இருவரும் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து செனட்டர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

யாக்கோப் மற்றும் சுரேஷ், இதற்கு முன் இருந்த செனட்டர் சந்திரமோகன் மற்றும் செனட்டர் டாக்டர் முகமட் நோர் மானூட்டி ஆகியோரின் பதவி காலம் முடிந்து விட்டதால் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கெஅடிலான் கட்சியை சேர்ந்த  யக்கோப், இதற்கு முன் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பு வகித்தார். இவரின் பெயரை செமந்தா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி முன்மொழிந்தார். சுரேஷ் சிங் பெயரை கோலா குபு பாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் சட்டசபையில் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.


மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தேர்வு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.

RELATED NEWS

Prev
Next