NATIONAL

அடுத்த ஆண்டு 185,000 ஏழைகளுக்கு ரிம 40 மின்சார கட்டணக் கழிவு

புத்ரா ஜெயா, டிசம்பர் 26:

எரிபொருள், அறிவியல், தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின் வழி மத்திய அரசாங்கம் 185,000 ஏழைகளுக்கு ரிம 40 மின்சார கட்டணக் கழிவு வழங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-இல் இருந்து இத்திட்டம் தொடங்கும் எனவும் அரசாங்கம் மொத்தம் ரிம 80 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது. ஈ-காசே மூலம் பதிவு செய்துள்ள ஏழ்மை குடும்பங்கள் இதில் பயன் அடைய முடியும் என்று அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.

தகுதி பெற்ற மலேசியர்கள் தங்களின் விண்ணப்பங்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தில் சரி பார்த்து கொள்ளலாம்https://semakanrebat.mestecc.gov.my atau dengan menghubungi My Government Call Centre (MyGCC) di talian 03-8000 8000.

மேலும் தெனாகா நேஷனல் நிறுவனத்திடமும்  1-300-88-5454 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :