NATIONAL

அரசாங்கம், சிறு இரப்பர் தோட்டக்காரர்களுக்கு ரிம164.78 மில்லியன் நிதிஉதவி

கோலா லம்பூர், டிசம்பர் 23:

274,639 சிறு இரப்பர் தோட்டக்காரர்களுக்கு அரசாங்கம் மழைக்கால உதவிநிதியாக ரிம 164.78 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சிறு இரப்பர் தோட்டக்காரர்கள் இரப்பர் சிறு தோட்ட மேம்பாட்டு கழகத்துடன் (ரிஸ்டா) பதிவு செய்து இருக்க வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதில் இரப்பர் தோட்டத்தை சுயமாக மரம் சீவும் 255,997 பேர்கள் மற்றும் 18,642 இரப்பர் தோட்டப் பாட்டாளிகளும் அடங்குவர் என்றார்.

” இவர்களுக்கு அரசாங்க சிறப்பு உதவித்தொகையாக ரிம 600 வழங்கப்படும். இந்த தொகை இரண்டு கட்டமாக கொடுக்கப்படும்.  ஆண்டு இறுதியில் ரிம 300 முதல் கட்டமாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீதமுள்ள ரிம 300 வழங்க வகை செய்யும், ” என்று அஸ்மின் அலி தமது அறிக்கையில்  தெரிவித்தார்.


Pengarang :