NATIONAL

ஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.

புத்ராஜெயா, டிசம்பர் 11 :

நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஆட்சி அல்லது அதிகார மாற்றம் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட வரலாற்றுப்பூர்வ புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

புத்ராஜெயாவின் அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 2 மணி நேரத்தில் அத்தொகைக்கு அப்புகைப்படங்கள் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்பட ஏலத்தில் துன் மகாதீர்,டத்தோஸ்ரீ வான் அசிசா,டான்ஸ்ரீ முகிதின் யாசின்,லிம் குவான் எங் மற்றும் முகமட் மாட் சாபு ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் துன் மகாதீர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்று பணியை தொடங்கி புகைப்படம் வெ.350,000க்கும் டத்தோஸ்ரீ வான் அசிசாவின் புகைப்படம் வெ.150,000க்கும் ஏலம் விடப்பட்ட நிலையில் டான்ஸ்ரீ முகிதின் புகைப்படத்திற்கு வெ.110,000யும் லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோரின் படங்கள் வெ.100,000க்கும் விற்பனையானது.

நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் வெ.2.885 மில்லியன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :