NATIONAL

ஆண்டு 1 முதல் படிவம் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு ரிம 100 கல்வி உதவித்தொகை

புத்ரா ஜெயா, டிசம்பர் 23:

ரிம 3000 வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ரிம 100 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். ஆண்டு 1-இல் இருந்து படிவம் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை கிடைக்கும் என அவர் விவரித்தார். பள்ளி தொடங்கும் வேளையில் பெற்றோர்களின் செலவினங்களை குறைக்க இது வழி வகுக்கும் என்றார்.

” நிதியமைச்சு இந்த சிறப்பு உதவித்தொகைக்கு ரிம 328 மில்லியனை கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஜனவரி முதல் எல்லா அரசாங்கப் பள்ளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்,” என லிம் குவான் எங் தெரிவித்தார்.

தகவல் : பெர்னாமா


Pengarang :