SELANGOR

இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்

ஷா ஆலம்,டிசம்பர் 10 :

புதியதாக நியமிக்கப்பட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பேற்றார்.

கடந்த 2013 முதல் பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அவர் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பினை திறன்பட ஆற்றுவார் என நம்பிக்கை கொண்டிருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

துணை சபாநாயகராகவும் முன்னாள் ஆட்சிக்குழுவின் உதவியாளராகவும் அவர் கொண்டிருந்த அனுபவம் அவர் திறன்பட பணியாற்ற பெரிதும் உதவும் என்றார்.

அவரது இந்நியமனம் மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அதேவேளையில் இளம் தலைமுறையின் சிறந்த எதிர்காலத்திற்கும் வழிகோலும் என்றார்.


Pengarang :