NATIONAL

ஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு?

கோலா லம்பூர்,  டிசம்பர் 14:

இன்று செஸன் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ  முகமட் ஈசா அப்துல் சாமாட் நம்பிக்கை மோசடி மற்றும் ரிம 3 மில்லியனுக்கு மேல்  ஒன்பது ஊழல் குற்றங்கள் புரிந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு சரவாக் கூச்சிங் நகரில் தங்கும் விடுதியை பெல்டா இண்வெஸ்மெண்ட் கோப்ரேஸன் நிறுவனம் வாங்கிய போது நடந்ததாக கூறப்பட்டது.

நீதிபதி அஸூரா அல்வி முன்பாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை 69 வயதான ஈசா சாமாட் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகளை துணை அரசு வழக்கறிஞர் டத்தோ உமார் சைஃபூடின் ஜாபார் தாக்கல் செய்த நிலையில் பிரதிவாதி ஈசா சாமாட் சார்பில் வழக்கறிஞர்கள் டத்தோ குமரேந்தன் மற்றும் ரிட்டா அப்டா சுபாரி ஆஜர் ஆகினார்கள்

தகவல் : பெர்னாமா


Pengarang :