SELANGOR

ஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்

ஷா ஆலம், டிசம்பர் 12:

ஊராட்சி மன்ற தேர்தலை நடத்த ஷா ஆலம் மாநகரத்தை ஒரு சோதனையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடும் முன் சிலாஙாகூர் மாநில அரசாங்கத்தின் கருத்தை பெற்று இருக்க வேண்டும் என மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார். கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட் அறிக்கை வெளியிடும் முன்னர் மாநில அரசாங்கத்தின் விளக்கத்தை கேட்டு இருக்க வேண்டும் என்று கூறினார்.

காலிட், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பல்வேறு தரப்பினரை இது சம்பந்தப்பட்டது குறிப்பாக அரசாங்க  பணியாளர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

” ஏற்கனவே பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தபடி அரசாங்கம் ஊராட்சி மன்ற தேர்தலை நடத்த விருப்பம் இல்லை என்ற கூற்றை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மதிக்கிறார்.வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஸூரைடா கமாரூடின் தமது  அமைச்சு ஊராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் முழு ஆய்வு செய்யும் என்ற முயற்சியை வரவேற்கிறோம்,” என இன்று வெளியிட்ட அறிக்கையில் போர்ஹான் தெரிவித்தார்.


Pengarang :