PBT

எம்பிஏஜே: வணிக உரிமங்களை உடனே புதுப்பிக்க வேண்டும்; இல்லையேல் நடவடிக்கை !!!

அம்பாங், டிசம்பர் 24:

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிஏஜே) அதிகாரத்தின் கீழ் இயங்கும் வணிகர்கள் உடனடியாக தங்களது 2019-ஆம் ஆண்டிற்கான வணிக உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என எம்பிஏஜேவின் தலைவர் டத்தோ அப்துல் ஹமீட் உசேன் நினைவுபடுத்தினார். அப்படி புதுப்பிக்க தவறினால் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

” 2018 டிசம்பர் 31-க்கு பிறகு புதுப்பிக்கப்படும் வணிக உரிமங்கள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ரிம 200 தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும். மார்ச் 31-க்கு பிறகு ரிம 700 விதிக்கப்படும் ( ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 2019 வரை), ” என இன்று நடந்த எம்பிஏஜேவின் மாதாந்திர கூட்டத்தில் இவ்வாறு அப்துல் ஹாமீட் கூறினார்.


Pengarang :