NATIONAL

ஏஎப்எப் கிண்ணம்: எப்ஏஎம், மேலும் 10,000 டிக்கெட்டுகள் இணையத்தில் ஏற்பாடு செய்தது

கோலா லம்பூர், டிசம்பர் 7:

எதிர் வரும் டிசம்பர் 11-இல் நடைபெறவிருக்கும் ஏஎப்எப் கிண்ண இறுதி ஆட்டத்தில் மோதும் மலேசியா மற்றும் வியட்னாம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில் ஆட்டத்தின் டிக்கெட்டுகள் இணையத்தில் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மலேசிய கால்பந்து சங்கம் (எப்ஏஎம்) தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் மேலும் 10,000 டிக்கெட்டுகள் இணையத்தில் விற்கப்படும் என்று பதிவு செய்துள்ளது. இணையத்தின் வழி விற்கப்படும் டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து நிலையில் இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

” எப்ஏஎம் மொத்த டிக்கெட்டுகள் 20,000-இல் இருந்து 30,000-க்கு  அதிகரித்து உள்ளது. நாளை காலை 9 மணியில் இருந்து இணையதளத்தில் பெற்று கொள்ளலாம். மீதமுள்ள 40,000 டிக்கெட்டுகள் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஞாயிற்றுக்கிழமை விற்கப்படும்,” என்று ஆங்கிலத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது.


Pengarang :