SUKANKINI

ஏஎப்எப் சுஸுகி கிண்ணம்: மலேசியா இறுதி ஆட்டத்திற்கு பெற்றது

பேங்கோக், டிசம்பர் 5:

நேற்று இரவு தாய்லாந்து ராஜமங்கலா அரங்கில் நடந்த ஏஎப்எப் சுஸுகி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய ஹாரிமாவ் மலாயா அணி 2-2 சமநிலை கண்டு இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. மலேசியா அணி 2-2 என சமநிலை கண்டாலும் எதிரணி அரங்கில் அடித்த கோலை கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் விளையாட முடிந்தது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மலேசிய அணியின் வெற்றிக்கு தனது டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.

” மலேசிய அணி இறுதி வரை போராட்டம் நடத்தி தென்கிழக்கு ஆசியா வெற்றியாளரான தாய்லாந்து அணியை வீழ்த்தி எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து உள்ளனர். பயிற்சியாளர் தான் செங் ஹோ, மலேசியா விளையாட்டாளர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் நலமுடன் நாட்டிற்கு திரும்பிட வேண்டுகிறேன், பாராட்டுக்கள்,” என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இறுதி ஆட்டம் எதிர் வரும் டிசம்பர் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது.

 

 


Pengarang :