SELANGOR

ஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்…

எதிர் வரும் காலங்களில், கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வரும் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) மேலும் திறன்மிக்க முறையில் மக்களுக்கு நன்மைகள் சென்றடையும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாமூட் தெரிவித்தார். ஐபிஆர் திட்டங்களை நிறுத்தும் முயற்சி ஏதும் இல்லை என்றும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு சிறந்த நன்மைகள் கிடைத்துள்ளது என்று கோடிட்டு காட்டினார்.

” மாநில அரசாங்கம் தற்போது எல்லா ஐபிஆர் திட்டங்களையும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஐபிஆர் திட்டங்கள் வளப்படுத்தும் வகையில் இருக்கும். இதன் அடிப்படையில், ஐபிஆர் மூலம் பயன் அடைந்த மக்கள் சுயமாக உழைத்து வாழ முடியும். மாநில அரசாங்கத்தின் உதவி தேவைப்படாது,” என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்ற கேள்வி நேரத்தில் இவ்வாறு சித்தி மாரியா மாமூட் தெரிவித்தார்.


Pengarang :