NATIONAL

கியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

கோலா லம்பூர், டிசம்பர் 12:

அம்னோவில் இருந்து வெளியேறிய பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனல்ட் கியாண்டி தனது தேசிய பொதுக் கணக்கு (பிஏசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளர் சைட்ரேஸான் ஜோஹான் வலியுறுத்தினார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கொண்ட கியாண்டி இதற்கு மேலும் பிஏசி தலைவர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று அவர் கூறினார். பிரதமர் துன் டாக்டர்  மகாதீர் முகமட் மற்றும் ஆளும் பாக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கியாண்டி மற்றும் 4 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

” சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஆளும் கட்சியை ஆதரிப்பதால், பிஏசிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை கியாண்டி இழக்க நேரிடும். எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பிஏசியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது புதிய நடைமுறை,” என்று  ஜோஹான் தெரிவித்தார்.


Pengarang :