SELANGOR

சிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்!!

ஷாஆலம், டிசம்பர்:

புதிய இஸ்லாமிய விவகாரம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு் ஆட்சிக்குழு உறுப்பினரின் பெயர் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடம் வெகு விரைவில் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இந்த மாத இறுதியில் இந்த நிலையில் முடிவு ஏற்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினரின் பெயர் சொல்லாமல் சொன்னார்.

” மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடம்  இந்த மாத இறுதிக்குள் பெயர் சமர்ப்பிக்கப்படும்,” என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற வளாகத்தின் முன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.


Pengarang :