NATIONAL

சிவராஜ் கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது?

புத்ரா ஜெயா, டிசம்பர் 28:

மஇகா உதவித் தலைவர் சி சிவராஜ், டிசம்பர் 13, 2018 தொடக்கம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியில் இருந்து நீக்குவதாக, தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்தது.

கடந்த நவம்பர் 30, தேர்தல் நீதிமன்றத்தின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு – பொதுத் தேர்தலில் சிவராஜ்ஜின் வெற்றியை இரத்து செய்தது- மற்றும் தேர்தல் தவறிழைத்தல் சட்டத்தின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுவதாக இசி தலைவர் அஸ்ஹார் அஸிஸான் தெரிவித்தார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, சிவராஜ் வாக்காளராகப் பதிவு செய்யவோ அல்லது பட்டியலிடவோ அல்லது எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கவோ முடியாது.

“அவரை எந்தவொரு தேர்தலிலும் தேர்ந்தெடுக்கவும் முடியாது,” என அஸ்ஹர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில், பிஎன் வெற்றிக்கு வழிவகுத்த, ஓர் ஊழல் நடைமுறைக்குப் பின்னர் சிவராஜ்ஜின் வெற்றியைத், தேர்தல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.


Pengarang :