ANTARABANGSA

சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 429; 1400 மேற்பட்டவர்கள் காயம் !!!

ஜாகர்த்தா,டிசம்பர் 25:

 கடந்த  சனிக்கிழமை இரவு ஏற்பட்ட

சுண்டா நீரினை சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 429-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு தலைமை முகமை அலுவலகம் கூறியது. மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக அதிகரித்த வேளையில், 145 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 11,687 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும்தற்காலிகமாக சேவை மையங்களில் தங்கியிருப்பதாகவும் இந்தோனிசிய தேசிய பேரழிவு நிறுவனத்தின்தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ரோஹொ தெரிவித்தார்.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் பணியினர் சென்றடைய ஆரம்பித்துள்ளதாகவும், ஆழி பேரலையால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பூகம்பம் மற்றும் கண்டத்தட்டு நகர்வியல்(tectonic plates) செயல்பாடு இல்லாமல் நடந்த முதல் ஆழிப் பேரலைச் சம்பவம் இது என இந்தோனிசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியது


Pengarang :