NATIONAL

நம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது

ஷா ஆலம், டிசம்பர் 11 :

நாட்டிம் கடனை அடைப்பதற்காக உருவாக்கப்பட்ட மலேசிய நம்பிக்கை நிதியம் வெ.198,739,243.02 மில்லியனை எட்டியது.

கடந்த 10ஆம் தேதி மதியம் 3 மணி வரையிலான கணக்கு இதுவென நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் முகநூலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் 1டிரிலியன் கடனை அடைக்க மக்களின் பங்களிப்பை அதில் இடம் பெற செய்ய கடந்த மே மாதம் 30ஆம் தேதி நாட்டின் பிரதமர் துன் மகாதீர் இந்த நிதியத்தை அறிமுகம் செய்தார்.

நாட்டின் கடனை அடைக்க மக்கள் இன்னமும் தங்களின் பங்களிப்பினை 5660 1062 6452 எனும் மே பேங்க் வங்கியில் செலுத்தலாம்.

நாட்டின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கும் இந்த நம்பிக்கை நிதியத்திற்கும் தொடர்பில்லை.அந்த நிதியம் நாட்டின் கடனை அடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என இதற்கு முன்னர் துன் மகாதீர் கூறியிருந்ததும் அதில் நினைவுக்கூறப்பட்டிருந்தது.

மக்களின் பங்களிப்பு விவேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :