NATIONAL

நாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்

கோலாலம்பூர், டிசம்பர் 10 :

நாட்டின் நாடாளுமன்றத்தின் தோற்றத்தை மதிக்கத்தக்கதாகவும் போற்றுதல்குரியதாகவும் உயிர்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம் என சொல்லப்பட்டு வந்த அதன் தோற்றத்தை மதிப்பு மிக்கதாய் உருமாற்ற
நாங்கள் எந்நேரமும் மக்களுக்கு சிறந்த ஒன்றை வழங்குவதற்கும் ஆக்கப்பூர்வமானதை உருவாக்கவும் சிந்தித்து வருகிறோம்.

நாடாளுமன்றம் என்பது கூடி மகிழும் இடமில்லை.அஃது போற்றுதல்குரியது.ஒரு நாட்டின் உன்னத தன்மையை கொண்டது என்பதை மெய்பிக்கும் வகையில் அதன் தனித்துவத்தை சிறந்த நிலைக்கு உயர்த்த முனைகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,நாடாளுமன்றம் குறித்த சிந்தனையும் தெளிவும் மாணவர்கள் உட்பட பொது மக்களிடத்திலும் ஆளுமை கொண்டிருக்க வேண்டும் எனவும் தெளிவுப்படுத்திய அவர் மலேசியா போன்ற ஜனநாயக நாட்டில் நாம் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு உட்பட்டு சிறந்த செயல்பாடுகளை ஜனநாயக முறையோடு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


Pengarang :