SELANGOR

மலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு?

கோலாலம்பூர், டிசம்பர் 12:

நாட்டில் விசையுந்து மற்றும் வாகனங்களை செலுத்தும் போது பாதுகாப்பு பட்டையை அணிவதில் மலேசியர்கள் இன்னமும் அலட்சியமாகவே உள்ளனர்.

அதனை அணியும் போக்கு மலேசியர்களிடையே மிகவும் அரிதாகவே காணப்படுவதாக டான்ஸ்ரீ லீ லாம் தாய் சுட்டிக்காண்பித்தார்.

பாதுகாப்பு பட்டையை அணியாமல் போவதால் விபத்தின் போது பெரும் காயங்களும் சில நேரங்களில் மரணத்திற்கும் அஃது வழிவகுப்பதாக அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் பாதுகாப்பு பட்டையை 90 விழுகாடு ஓட்டுனர்கள் அணிவதாகவும் அதில் பயணம் செய்வோரில் வெறும் 70 விழுகாடு மட்டுமே அதனை அணிவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு பட்டையை அணிவதன் மூலம் மரணத்தையும் பெருங்காயங்களையும் விபத்தின் போது தவிர்க்க முடியும் என குறிப்பிட்ட அவர் பாதுகாப்பான பயணத்திற்கு அஃது மிகவும் அவசியம் என்றார்.


Pengarang :