NATIONAL

வான் சைபூல்: பிடிபிடிஎன் கடன் தொகைகளை திருப்பிச் செலுத்துங்கள் !!!

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 27: 

தேசிய உயர்க் கல்வி கடன்நிதியை (பிடிபிடிஎன்) பெற்ற மாணவர்கள், சிறிய அளவிலான முறையிலும்  கடன் தொகைகளை திரும்பி செலுத்த வேண்டும்என்று பிடிபிடிஎன் தலைவர்,வான் சைபுல் கேட்டுக் கொண்டார்.

கடன் பெற்றவர்கள் எதிர்கால மாணவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

தற்போது, 1.8 மில்லியன் கல்வி நிதிக் கடனாளிகள் உள்ளனர்ஆனால் அவர்களில் 20 சதவிகிதத்தினர், தங்களின் படிப்பை முடித்தப் பிறகும், பெற்றக் கடனை இதுவரையிலும் செலுத்த முன்வரவில்லை.

முந்தையப் பதிவுகளைச் சரியாக பராமரிக்காத பட்சத்தில், 353,000 பேர்களின் விபரங்களை திரட்டக் கடினமாக உள்ளது என அவர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதால்பிடிபிடிஎன் இவர்களை அடையாளம் காண்பதற்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 

இதற்கிடையே, பெற்றக் கடன்களை திருப்பிச் செலுத்த பிடிபிடிஎன் புதியதொரு திட்டத்தை அறிமுகம் செய்யும் என அறிவித்திருந்தது.


Pengarang :