அஸ்மின் & குவான் எங், சிறப்பான முறையில் கடமை ஆற்றி உள்ளனர் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அஸ்மின் & குவான் எங், சிறப்பான முறையில் கடமை ஆற்றி உள்ளனர்

ஷா ஆலம், ஜனவரி 9:

பாக்காத்தான் ஹாராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றிய பின்னர் அமைச்சர் பதவியை ஏற்ற பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தமது கடமைகளை நிறைவாக ஆற்றி உள்ளார் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். சின் சியூ டேய்லி உடன் நடத்திய நேரடி பேட்டியில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.

அஸ்மின் அலி மற்றும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் ஒருங்கிணைந்து மலேசியாவின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை வரைந்தனர். தேசிய முன்னணி விட்டுச் சென்ற மோசமான நிதிநிலையை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளதை நினைவு படுத்தினார்.


” தற்போதைய சூழ்நிலையில் பார்க்கும் போது, இரண்டு பேருமே சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பாக்காத்தான் அரசாங்கம், முந்தைய அரசு ஏற்படுத்திய கடன் சுமையை குறைக்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும், ” என அவர் பேட்டியில் தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next