செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

ஷா ஆலம், ஜன.11:

செமினி சட்டமன்ற உறுப்பினர் முகமட் பக்தியார் முகமட் நோர் (வயது 57) இன்று அதிகாலை 4.45 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

காஜாங் மருத்துவமனையில் இவர் காலமானதாக மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.


அன்னாரது நல்லுடல் ஜாலான் சுங்கை லாலாங்கில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு , வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செமினி, கம்போங் பாசீர் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படும்.

கம்போங் பாசீர் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் செமினி சட்டமன்ற தொகுதியில், தேசிய முன்னணி வேட்பாளர் மாட் ஷாமிடுரை எதிர்த்து போட்டியிட்ட முகமட் பக்தியார் 8,964 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Prev
Next