செயல்திறன் அடைவுநிலை குறியீட்டுக்கு ஏற்ப போனஸ் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

செயல்திறன் அடைவுநிலை குறியீட்டுக்கு ஏற்ப போனஸ்

ஷா ஆலம், ஜன.10:

பொதுச் சேவை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது செயல்திறன் அடைவு நிலை குறியீட்டுக்கு ஏற்ப போனஸ் வழங்க அரசாங்கம் உத்தேசித்து வருகிறது.

ஒரு தனிநபர் அல்லது ஒரு துறையில் செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு காலம் கனிந்துவிட்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷா தெரிவித்தார்.


2008ஆம் ஆண்டு தொடங்கி வகுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி நில வரி கட்டணத்தை வசூலிக்கும் நில அலுவலகத்திற்கு ஊக்குவிப்பு தொகையை மாநில அரசு வழங்கி வருகிறது.

“எனவே, இந்தக் கலாச்சாரத்தை நாம் மீண்டும் கடைபிடித்தால் சிறந்த, திறமை மற்றும் தரமான சேவையைத் தொடர முடியும்.”

உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற 2019 சிலாங்கூர் பட்ஜெட் மீதான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் மேற்கண்டவாறு பேசினார்.

RELATED NEWS

Prev
Next