வாகன தொழில்துறை முதலீட்டாளர்களைக் கவர்வதில் சிலாங்கூர் முன்னணி | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

வாகன தொழில்துறை முதலீட்டாளர்களைக் கவர்வதில் சிலாங்கூர் முன்னணி

ஷா ஆலம், ஜன.10:

வாகன தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக ஊக்குவிப்பு வழங்கியதுடன் அதன் தரத்தையும் நிலைநிறுத்துவதன் வழி சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் வாகன தொழில்துறையும் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, அதன் உற்பத்தித் திறனாற்றலும் உயர்ந்துள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.


2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கூடுதல் எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களை சிலாங்கூர் கவர்ந்துள்ளது என்றார் அவர்.

இது வரை 143 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு நாட்டின் பிரசித்தி பெற்ற முதலீட்டு தளமாக சிலாங்கூர் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

இது மாநிலத்தின் வர்த்தக நட்புறவு கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அதோடு மலேசியாவுக் மட்டுமல்லாது தெற்காசிய வட்டாரத்திலும் முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக சிலாங்கூர் திகழ வேண்டும் என்ற இலக்கை வெற்றி பெறச் செய்துள்ளது. என்றார் அவர் பெருமிதத்துடன்.

RELATED NEWS

Prev
Next